நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர மறுத்த பிரதீப் ரங்கநாதன்.. காரணம் இதுதான்.?

தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அதனால் என்னவோ இளம் இயக்குனர்கள் தொடங்கி மூத்த இயக்குனர்கள் வரை பலரும் விஜய் வைத்து படம் பண்ண காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் தளபதி விஜய் தற்பொழுது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து லியோ திரை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் மூன்றாவது கட்டப்படிப்பு சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது. லியோ படத்தில் விஜயுடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி  திரிஷா..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் இணைந்து படம் பண்ணவும் நடிகர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளிப்படுகின்றன இந்த நிலையில் விஜயை வைத்து படம் பண்ணும் வாய்ப்பை தவறவிட்டு உள்ளார்  ஒரு இளம் இயக்குனர் அவர் வேறு யாரும் அல்ல..

கோமாளி மற்றும் 2022ல் வெளிவந்து வெற்றியடைந்த லவ் டுடே படங்களை இயக்கி,  நடித்து பிரபலமடைந்த பிரதிப் ரங்கநாதனுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைத்ததாம் ஆனால் அவர் படங்களில் நடிக்கவே அதிகம் ஆர்வம் காட்டியதால் விஜய் பட வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

இதனை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ளார் விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள்  தளபதி விஜய் பட வாய்ப்பை நீங்கள் தவறவிட்டதை நினைத்து பின் நாட்களில் ரொம்ப வருத்தப்படுவீர்கள் எனக் கூறி பிரதீப் ரங்கநாதனுக்கு எதிராக கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment