தனது தந்தையை முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க விடாமல் தடுத்து நிறுத்திய பிரபு.! காரணம் இது தான்.!

0
sivaji
sivaji

ஒரு காலகட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படங்களை பார்ப்பதற்காகவே பல ரசிகர்களும் திரையரங்குகளுக்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள் அதிலும் குறிப்பாக இவரது திரைப்படம் வெளிவருது என்று தெரிந்தாலே போதும்.

முதல் நாள் வசூல் மட்டுமே அந்த காலத்திலேயே அதிகமாக இருந்துள்ளது மேலும் சிவாஜி உடல்நிலை சரியில்லாமல் இருந்த பொழுதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அப்படி இவர் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் தான் தேவர் மகன்.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி கதாபாத்திரம் தான் மக்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாக தற்பொழுது வரை திகழ்ந்து வருகிறது அதற்கு காரணம் தேவர்மகன் திரைப்படத்தில் சிவாஜி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று கமல் அப்பொழுதே கூறியுள்ளார்.

மேலும் தேவர் மகன் திரைப்படத்தில் சிவாஜி நடிப்பதற்கு உடனே ஒற்றுக்கொள்ள வில்லையாம் அவருக்கு அப்பொழுது உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தினால் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கமலிடம் கூறியுள்ளாராம்.

ஆனால் அப்பொழுதும் கமல் விடவில்லையாம் குறிப்பாக எனது மகன்கள் என்னை திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று கூறி வருகிறார்கள் எனது உடல்நிலை தற்பொழுது சரியில்லாமல் தான் நான் சிகிச்சைக்காக செல்கிறேன் என்று சிவாஜி கமலிடம் கூறிய பொழுது.

sivaji
sivaji

கமல் உங்களது சிகிச்சை எத்தனை நாட்கள் என்று கேட்டுள்ளார் அதற்கு சிவாஜி எனது சிகிச்சை இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் ஆகலாம் என்று கூறியுள்ளார் கமல் சரி உங்களது சிகிச்சை முடிந்து நீங்கள் பொறுமையாக நடித்துக் கொடுங்கள் என்று கூறியுள்ளாராம் பின்பு சிவாஜி சிகிச்சை முடிந்து திரும்பி வந்து தேவர்மகன் திரைப்படத்தில் நடித்து கொடுத்ததாக இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.