90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு ஜோடியான பிரபு, குஷ்பூ : நடிப்பில் அசரவைத்த டாப் 10 திரைப்படங்கள் இதோ.

90 காலகட்டங்களில் பல்வேறு விதமான நடிகர் நடிகைகள் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிறப்பாக வலம் வந்தனர். அந்த வகையில் ஒரு ஜோடி மட்டும் தொடர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் அப்போதைய காலகட்டத்தில் சிறப்பாக வலம் வந்தனர். அந்த ஜோடி வேறு யாருமல்ல பிரபு மற்றும் குஷ்பு தான்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல்வேறு திரைப்படங்களில் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியதோடு பல நாட்கள் ஓடிய திரைப்படங்களாக இருக்கின்றன அந்த வகையில் இருவரும் சேர்ந்து நடித்த 10 திரைப்படங்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.

  1. தமிழ் திரை உலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வாசு இவர் இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியான திரைப்படம் “சின்னத்தம்பி” இந்த படத்தில் இருவரின் நடிப்பும் வேற லெவல் இருந்ததோடு கதைகளும் சிறப்பாக இருந்ததால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. அதிக நாட்கள் ஓடியது படம். இவர்களுடன் இணைந்து கவுண்டமணி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு பக்கம் சிரிக்கவும் வைத்து அசத்தினார்.

2. நடிகர் பிரபு இரட்டை வேடத்தில் நடித்து 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சின்ன வாத்தியார்” இந்த திரைப்படத்தில் குஷ்பு மற்றும் ரஞ்சிதா போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து சுமாரான வெற்றியைப் பெற்றது.

3. பிரபு குஷ்பூ இணைந்து ஜோடியாக நடித்த திரைப்படம் “தர்மசீலன்” இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் படம் வெளிவந்து மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

4. இசைஞானி இளையராஜா இசையில் பிரபு குஷ்பூ நடிப்பில் வெளியான திரைப்படம் “உத்தம ராசா” இந்த திரைப்படம் செந்தில் காமெடி போன்றவர்களும் நடித்திருந்தால் படம் வெளிவந்து ஓரளவு சுமாராகவே ஓடியது.

5. பிரபு குஷ்பூ இணைந்து நடித்த மற்றுமொரு திரைப்படம் “மறவன்” இந்த திரைப்படம் இவர்கள் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டாலும் படம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை பெறவில்லை.

6. ரஜினி, பிரபு இணைந்து நடித்த மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் “தர்மத்தின் தலைவன்” இந்த திரைப்படத்தில் பிரபு ஜோடியாக குஷ்பு நடித்து அசத்தினார்.  இப்படம் பிரபு, குஷ்பு கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக பார்க்கப்படுகிறது.

7. “மை டியர் மார்த்தாண்டன்” இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அதிக காமெடியை கலந்த திரைப்படமாக இருந்தது. இந்த படத்தில் பிரபு, குஷ்பு போன்றோர் தனது சிறந்த நடிப்பை வழக்கம்போல வெளிப்படுத்தி இருந்தனர் படம் வெளிவந்து சுமாராக ஓடியது.

8. பிரபு குஷ்பூ இணைந்து நடித்து வெளியான திரைப்படம் “பாண்டித்துரை” இந்த திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் அந்த வகையில் கவுண்டமணி, ராதாரவி, சில்க் ஸ்மிதா போன்ற பலரும் நடித்திருந்தாலும் படம் சுமாரான வெற்றியையே பெற்றது.

9. பிரபு குஷ்பூ இணைந்து நடித்த மற்றொரு படம் “நாளைய தீர்ப்பு” இந்த படத்தில் கவுண்டமணி காமெடி வேற லெவெலில் இருந்தது இதனால் படம் சுமாராக ஓடியது.

10. வாசு இயக்கத்தில் வெளியான மற்றொரு “கிழக்கு கடற்கரை” இந்த சின்ன தம்பி படம் போவே ரசிகர்கள் எதிர் பார்த்தனர் ஆனால் படம் சொல்லும் படி ஓடவில்லை.

 

Leave a Comment