தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின் ஹீரோ இயக்குனர் என தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் பிரபுதேவா தமிழில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் ஒரு கட்டத்தில் இந்தி பக்கம் போனார்.
அங்கு பிரபலங்களை வைத்து படங்களை இயக்கிய தோடு மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து நடனமாடி தனது திறமையை நிரூபித்தார். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் தற்போது கூட இவர் நடிப்பில் பஹீரா என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அவர் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்லிமலை ஆகாயகங்கை அருவி யில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தை பாடலாசிரியர் பா விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக மகிமா நம்பியார் நடிக்கிறார் மேலும் என்னுடன் இணைந்து தேவதர்ஷினி தீனா ஆர்ஜி ஆகியோர் இணைந்து உள்ளனர் மேலும் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்திற்கு தற்போது பெயர் வைக்கப்படவில்லை என்றாலும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டு வருகிறது. கொல்லிமலை ஆகாயகங்கை யாரும் படப்பிடிப்பு இதுவரை நடத்தியதே கிடையாது ஏனென்றால் 1750 செங்குத்தான படிகள் இறங்கிச் சென்றால் தான் நீங்கள் அருவியை கண்ணால் பார்க்க முடியும் இறங்குவது எளிது.

ஆனால் ஏறுவதற்குள் நாக்கையே தள்ளிவிடும் அந்த அளவிற்கு மிக கஷ்டமாக இருக்கும் இந்த இடத்தில் முதல் முறையாக பிரபுதேவாவின் படப்பிடிப்பு நடத்துவது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுது உள்ளது மேலும் அருவியில் படப்பிடிப்பு தற்போது சிறப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

