மொட்டையுடன் வித்தியாசமான கண்ணாடி போட்டுகொண்டு ஆளே மாறிய பிரபுதேவா.! வைரலாகும் புதிய போஸ்டர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா, இவர் தமிழ் சினிமாவில் நடிகர் மட்டுமல்லாமல், நடன அமைப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை வெளிக்காட்டி வருகிறார், இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். பிரபுதேவாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது அதனால் அடுத்த மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைத்தார்கள்.

இந்த நிலையில் இதுவரை பிரபுதேவா நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார், மேலும் பிரபுதேவா நடித்து வரும் படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, பஹீரா திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், ஆகிய திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆகியது, இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த போஸ்டரில் பிரபுதேவா அவர்கள் மொட்டையடித்து வித்தியாசமான கண்ணாடியை அணிந்து புதிய தோற்றத்தில் இருக்கிறார், இதோ வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

Leave a Comment