தளபதி 66ல் பிரபுதேவாவா..? விஜயின் காலுக்கு வேலை வந்து விட்டது போல..!

prabu-deva-3
prabu-deva-3

தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வம்சி இவர்  சமீபத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜயை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என பெயர் வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திரைப்படத்தினை தில் ராஜி அவர்கள் தான் தயாரிக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜயுடன் ராஷ்மிகா மற்றும் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் ஸ்ரீகாந்த் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.

பொதுவாக தளபதி விஜயின் திரைப்படம் என்றால் மியூசிக் மிக பிரமாண்டமாக இருக்கும் அந்த வகையில் அனிருத் சமீபத்தில் தளபதி விஜய்க்கு இசை அமைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார் அதுமட்டுமில்லாமல் இவரும் தளபதி ரசிகர் என்ற காரணத்தினால் இந்த திரைப்படத்தின் இசை மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தளபதி 66வது திரைப்படத்தில் பிரபுதேவா இருக்கும்படி ஒரு புகைப்படம் வெளிவந்து சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு மெகா ஹிட் பாடல் பிரபுதேவா அவர்கள் தான் நடனம் அமைத்து கொடுக்க உள்ளாராம்.

நடிகர் பிரபுதேவா அவர்கள் விஜயுடன் போக்கிரி வில்லு போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடன ஆசிரியராக வலம் வந்தது மட்டுமில்லாமல் தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்ததை மிகவும் சந்தோஷமாக கருதி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் எப்படிப்பட்ட பாடல் வரும் அதில் எப்படி நடனம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.

prabu-deva-3
prabu-deva-3

ஆனால் ஒரு சிலரோ இது வேற ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் என இந்த செய்தியை வதந்தி என நம்பி வருகிறார்கள்.

prabu-deva-3
prabu-deva-3