பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடிக்க போறது.! இந்த நாயகியா.. உறுதியான தகவல்.

0

நடிகர் பிரபாஸின் படங்கள் சமீபகாலமாக வேற லெவல் ஹிட் அடிப்பதால் தற்போது  அவர் நடிக்க உள்ள  திரைப்படங்களும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக இருந்து வருகிறது.

பாகுபலி, சஹோ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தற்போது அவர் நடிக்கும் ராதேஷ்யாம், சாலர், ஆதி புருஷ் போன்ற படங்களும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகின்றன இவை அனைத்துமே 200 கோடிக்கும் மேலான பட்ஜெட் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக ஆதிபுருஷ் படம் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது இத்திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளதால் படத்தை வேற லெவெலில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தை ஓம் ராவத் என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது முதலில் பிரபாஸ் ராமன் கேரக்டரிலும் நடித்து வருகிறார்.

இராவணன் கேரக்டரில் சையது அலி கானும் நடிக்கிறார். இவர்களது இருவரின் படப்பிடிப்பும் எடுக்கப்பட்ட வந்த நிலையில் சீதை கேரக்டரில் யார் நடிப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது ஒரு நடிகையை தேடி கண்டுபிடித்து உள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகையான கீர்த்தி சனோன் இந்த படத்தில் சீதை கேரக்டரில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரும் தனது சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய பயணம் தொடங்க இருப்பதாகவும் ஆதி புரூஸ் படத்தில் உள்ள சீதை கேரக்டரில் நடிப்பதில் பெருமை கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.