பாகுபலியை விட பல மடங்கு பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்துள்ள பிரபாஸ்.! வைரல் ஆகுது ஆதிபுரூஷ் டீசர்.!

0
prabhas
prabhas

பாகுபலி திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கிய நடிகர் தான் பிரபாஸ் இவர் பாகுபலி முதல் பாகத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி விட்டது அந்த வகையில் பார்த்தால் பாகுபலி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து விட்டது.

அதேபோல் நடிகர் பிரபாஸுக்கும் நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டே போகிறது மேலும் இவரது ரசிகர்கள் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுரூஸ் திரைப்படத்தை பார்ப்பதற்காக மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் ஆம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தை ஓம் ராவ் இயக்கியுள்ளார் மேலும் இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்திருக்கிறார் வில்லனாக ராவணன் கேரக்டரில் சைஃப் அலிகான் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது மேலும் இந்த டீசரை பார்க்கும் பொழுது பிரபாஸின் நடிப்பு மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த திரைப்படத்தில் இவர் தனது முழு திறமையும் வெளிப்படுத்தி உள்ளார்.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படம் எப்பொழுது திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் தற்பொழுது பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் டீசரைப் பார்த்துவிட்டு நடிகர் பிரபாஸுக்கு இந்த திரைப்படம் கண்டிப்பாக கை கொடுக்கும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க எங்களது வாழ்த்துக்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.