ஏர்போர்ட்டில் புதிய தோற்றத்தில் இருக்கும் பிரபாஸை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.! வைரல் ஆகிய புகைப்படம்

நடிகர் பிரபாஸ் பாகுபலி என்ற ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர், அதனால் பிரபாஸ் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபாஸ் திரைப்படமான சகோ திரைப்படம் திரைக்கு வந்தது இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் வசூலில் 400 கோடிக்கு மேல் வசூலானது.

இந்நிலையில் பிரபாஸ் அடுத்ததாக இளம் இயக்குனருடன் புதிய திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார், இந்த திரைப்படம் காதல் கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் நடிக்கும் பிரபாஸ் சமீபத்தில் ஏர் போர்ட்  வந்தார், அவரைப் பார்த்த பலரும் ஷாக் அடைந்துள்ளார்கள், ஏனென்றால் அவர் மாஸ்க் அணிந்து கொண்டு வந்துள்ளார், ஏன் இப்படி வந்துள்ளார் என பார்த்தால் எல்லோருக்கும் தெரிந்ததுதான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அவரின் பாதுகாப்பிற்காக இவ்வாறு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

prabhas
prabhas

Leave a Comment