350 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடித்த சாஹோ திரைப்படம் இந்த திரைப்படத்தின் காப்பியா.? இதோ ஆதாரம்

0
saahoo movie
saahoo movie

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதும் பிரபலமானார், அந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுஜித் இயக்கத்தில் ஷரத்தா கபூர் உடன் ஜோடி சேர்ந்து பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் சாஹோ.

இந்த திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது, மேலும் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் கடந்த 30 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்து உள்ளார்கள், மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

பாகுபலிக்கு பிறகு ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த திரைப்படம் இதுதான், இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிய நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வெளியான 3 நாட்களில் 294 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளன.

பிரஞ்ச் நாவலைத் தழுவி ஏற்கனவே எடுக்கப்பட்ட லார்கோ வின்ச் என்கின்ற படத்தை காப்பி அடித்து இந்த சாஹோ படம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு இயக்குனர் ஜெரோம் செல்லி  என்பவர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார், இதற்கு முன் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அஞ்ஞானாவாசி என்கின்ற திரைப்படமும் லார்கோ வின்ச் படத்தின் முதல் பாகத்தின் காப்பி எனவும் அவர் கூறியுள்ளார்.

What is creativity? What is art? Where does it come from? We know what it is not. It’s not your social status.It’s…

Posted by Lisa Ray on Friday, 30 August 2019

மேலும் அவர் காட்டமாக காப்பி அடிக்கிறது தான் அடிக்கிறீர்கள் ஆனால் அதை திறம்பட எடுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார், அதுமட்டுமில்லாமல் சாஹோவில் பிரபாஸ் மற்றும் ஷரத்தா கபூர் இடம் பெற்ற பேபி வாண்ட் யூ டெல் மி என்ற பாடலில் வரும் செட் அமைப்பு பெங்களூரை சேர்ந்த பிரபல லிசா ரே என்பவருக்கு சொந்தமான ஓவியம் அதைத் திருடி எந்த ஒரு உரிமமும் அளிக்காமல் பயன்படுத்தியுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

saahoo movie
saahoo movie

மேலும் இதற்கு முன் வெளியாகிய போஸ்டரில் ஸ்ரத்தா கபூர் மற்றும் பிரபாஸ் இருப்பதுபோன்று வெளியாகியது ஆனால் அந்தப் போஸ்டர் ஏ டில் ஹை முஷ்கில் படத்தின் ரன்பீர் கபூரும் ஐஸ்வர்யா ராய் கொடுத்த போஸ் என விமர்சிக்கப்பட்டது. இப்படி பிரஞ்ச் பட காபி போஸ்டர் காபி என பல சர்ச்சையை சந்தித்து வருகிறது இந்த சாஹோ.