தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த விஜய் டிவி பிரபல நடிகை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

vijay-tv-actress
vijay-tv-actress

வெள்ளித்திரை நடிகைகளைவிட ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரை நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் இவர்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் எளிதில் உருவாகிவிடுகிறது அந்த வகையில் சின்ன திரையில் தொடர்ந்து பல வருடங்களாக சீரியல் நடிகையாகவும் டான்ஸராகவும் பணியாற்றி வருபவர் தான் ஆனந்தி அஜய்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1, மிஸ்டர் அண்ட் மிஸ்டர்ஸ் கில்லாடி உள்ளிட்ட சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்ற அசதி இருந்தார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து பிரபலமாக இருந்து வந்தார் பிறகு 2017ஆம் ஆண்டு அஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அசத்தினார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் தொடர்ந்து பெற்று வந்தார்.அந்த வகையில் தாரை தப்பட்டை, வாலு,ரௌத்திரம்,டமால் டுமீல், மீகாமன் உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த வந்தார். இதனைத் தொடர்ந்து கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், ராஜபார்வை,அம்மன் என பல சீரியல்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தார்.

இவ்வாறு தொடர்ந்து சின்னத்திரை, வெள்ளித்திரை என பிசியாக இருந்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது மேலும் ரசிகர்களிடம் கலந்துரையாடுவது போன்றவற்றை செய்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

anandhi
anandhi

இப்படிப்பட்டநிலையில் பெரிதாக சீரியல்களிலும் நடிக்காமல் இன்ஸ்டாகிராமிலும் தனது புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வந்த இவரிடம் ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர் அந்த வகையில் தற்பொழுது தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.