சிவகார்த்திகேயனுக்கு பதிலாக ரஜினியின் “ஜெயிலர்” படத்தில் நடிக்கபோகும் பிரபல தமிழ் நடிகர்.?

rajini-
rajini-

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இவர் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் அண்மைக்காலமாக வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே கொடுக்கிறார் அந்த வகையில் இப்பொழுது தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

இந்த படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் பிரம்மண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கப்பட்டது சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட..

ஒரு படமாக இருக்கும் என தெரிய வருகிறது இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி மற்றும் பலர் இந்த படத்தில் கமிட் ஆகி உள்ளனர் மேலும் பல்வேறு புதிய நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் கமிட்டாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் ஒருவராக பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்த சரவணன் இந்த படத்தில் கமிட்டாகி உள்ளதாக சொல்லப்படுகிறது மேலும் அறந்தாங்கி நிஷாவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது தமிழ் சினிமா உலகில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து ஓடிக் கொண்டிருக்கும்..

நடிகர் ஜெய் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது குறிப்பாக இந்த படத்தில் ஜெய் தமன்னாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..