ஏகே 62 இல் அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை.! வெளியான புதிய அப்டேட்…

0
ak62
ak62

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்துடன் வாரிசு திரைப்படம் மோதிக்கொண்ட நிலையில் இரண்டு படங்களும் தற்போது போட்டி போட்டுக் கொண்டு வசூல் வேட்டை ஆடி வருகிறது.

அதனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் பல சாதனைகளை செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் மலேசியாவில் ரசிகர்களால் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அளவிற்கு எந்த திரைப்படமும் கொண்டாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கம் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன் தற்போது சபரிமலைக்கு சென்று இருப்பதால் திரும்பி வந்த உடனே படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

துணிவு திரைப்படம் வெற்றி நடை போட்டு கொண்டு வரும் நிலையில் அடுத்த படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ள அஜித் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதனை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து பிரபல முன்னணி நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது அஜித் அவர்களுடன் இதுவரைக்கும் ஜோடி போட்டு நடிக்காமல் இருந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் தான் ஏகே 62 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் ஏகே 62 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யாராயின் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது இதனை தொடர்ந்து ஏகே62 திரைப்படத்தில் அஜித்துடன் இணைவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. மேலும் விரைவில் பட பிடிப்பு தொடங்கும் எனவும் இதற்கான அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.