அடுத்த பஞ்சாயத்தில் சிக்கிய ஜில் நடிகை.. பிரியப் போகிறதா நட்சத்திர ஜோடி?

இது விவாகரத்து சீசன் போலிருக்கிறது. அடுத்தடுத்து பிரபலங்கள் தங்களுடைய பிரிவு செய்தியை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். ஏற்கனவே ஒல்லி நடிகரின் விவாகரத்து இப்போது வரை விமர்சனமாக இருக்கிறது.

அதையடுத்து இசை ஜோடி, ஸ்ட்ரிக்ட் இயக்குனர் என ஒவ்வொருவராக விவாகரத்தை அறிவித்தனர். சமீபத்தில் கூட வெற்றி ஹீரோ மனைவியை பிரிந்தார். இது எல்லாமே பெரும் சர்ச்சையாக தான் பேசப்பட்டு வருகிறது.

இந்த லிஸ்டில் அந்த நட்சத்திர ஜோடியும் இணைய போவதாக கூறுகின்றனர். உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஜில் நடிகை வாரிசு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் நன்றாக இருந்த இவர்களுடைய திருமண வாழ்வு தற்போது பிரச்சனையாக இருக்கிறதாம்.

பொது விழாக்களில் கூட நடிகை கணவருடன் ஒட்டியும் ஒட்டாமல் தான் வந்து செல்கிறார். அதிலும் சில சமயங்களில் தன் மகளை மட்டுமே அழைத்துக் கொண்டு விழாக்களுக்கு வருகிறார்.

இதனால் இவர் கணவரை பிரிய போவதாக சிலர் வெளிப்படையாகவே கூறினர். ஆனால் நடிகை அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. இருந்தாலும் இந்த பேச்சு கொஞ்சம் அதிகப்படியாகவே சென்று விட்டது.

இதனால் கடுப்பான நடிகை பிரிவு என்ற எண்ணமே எனக்கு கிடையாது என முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இதற்கு முக்கிய காரணம் கணவரும் நடிகையும் மகளின் எதிர்கால வாழ்வுக்காக அமைதியாக இருக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.