வம்பை விலை கொடுத்து வாங்கும் கணவர்.. டென்ஷனில் உப்புமா நடிகை

அந்த நடிகை ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்தார். அப்போதே அந்த இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் கல்யாணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வந்தார்.

ஆனால் திருமணம் ஆகிவிட்டது என்ற காரணத்தினாலேயே அவருக்கு இருந்த மவுசு குறைய தொடங்கியது. ஆனாலும் நடிகை சின்னத்திரை, வெள்ளித்திரை என பிசியாக நடித்த வருகிறார்.

அதேபோல் நடிகைக்கு பல அவதாரங்களும் உண்டு. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கணவர் குடும்பம் பிள்ளைகள் என அவர் குடும்பத்தையும் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார்.

இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படி நடிகை தனக்கென ஒரு மரியாதையோடு இருந்து வரும் நிலையில் கணவர் செய்யும் சில விஷயங்கள் அவரை டென்ஷன் ஆகிவிட்டதாம்.

அதாவது நடிகையின் கணவருக்கு வெளிப்படையாக பேசி தான் பழக்கம். அதில் சில பகீர் விஷயங்களும் இருக்கும். ஆனாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாத அவர் மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைத்து விடுவார்.

இப்படித்தான் ஒரு நடிகரை பற்றி அவசரகுடுக்கை போல் அவர் பேசி சர்ச்சையில் சிக்கினார். அப்படித்தான் இப்போதும் பிரபல அரசியல் கட்சி குறித்து அவர் ஒரு பேட்டியில் தாறுமாறாக பேசியிருக்கிறார்.

அதேபோல் மாஸ் ஹீரோ தொடங்கி இருக்கும் கட்சி எவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்குமோ தெரியாது என்று கூட கருத்து சொல்லி இருக்கிறார். இதற்கு கடும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

எதற்கு நடிகையின் கணவருக்கு தேவையில்லாத இந்த வேலை என சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இதெல்லாம் நடிகையின் காதுக்கு சென்ற நிலையில் அவர் தன் கணவரிடம் கொஞ்சம் பார்த்து பேசுங்க என அன்பு கட்டளை போட்டிருக்கிறாராம்.