மாஸ் ஹீரோ வீட்டு பிரச்சனை தான் கடந்த சில வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் மனைவியை பிரிந்ததற்கு அந்த மூன்று எழுத்து நடிகை தான் காரணம் என சோசியல் மீடியாவே ரணகளமானது.
இன்னும் சிலர் வெளிப்படையாகவே இதை பற்றி பேசி பிரச்சனையை பெரிதாக்கினார்கள். ஆனால் நடிகர் தரப்பிலிருந்து இதற்கு வழக்கம் போல எந்த ரியாக்ஷனும் கிடையாது. சர்ச்சை மட்டும் புகைந்து கொண்டே இருந்தது.
அதிலும் நடிகரின் முக்கிய நிகழ்வுகள் எதிலும் மனைவி தலை காட்டவே இல்லை. போதாத குறைக்கு சமீபத்தில் வெளியான படத்தில் கூட அந்த நடிகை ஹீரோவுடன் செம குத்தாட்டம் போட்டிருந்தார்.
இது எல்லாத்தையும் சேர்த்து வைத்து இனிமேல் இவர்கள் சேரவே மாட்டார்கள் என பேசப்பட்டது. ஆனால் அங்கு தான் பெரிய டிவிஸ்ட் நடந்துள்ளது. அதாவது தற்போது வெளியான தன்னுடைய படத்தை ஹீரோ தன் குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து இருக்கிறார்.
அதிலும் முக்கியமாக மனைவி படத்தை பார்த்து ரொம்பவும் என்ஜாய் செய்தாராம். நடிகரின் குழந்தைகள் கூட ஆர்வத்துடன் பார்த்திருக்கிறார்கள். இந்த செய்தி தான் இப்போது சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அதற்கான எந்த போட்டோக்களும் வெளிவரவில்லை. இருந்தாலும் ஒரு வழியாக கோபம் தணிந்து நடிகரின் மனைவி சமாதானம் ஆகிவிட்டாரே என ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.