பூவே பூச்சூடவா சீரியலில் இணைந்துள்ள பிரபல விஜய் டிவி நடிகை.! அட, இவர் ரசிகர்களின் ஃபேவரட் நடிகை ஆச்சே.!

பிரபல விஜய் டிவியில் நடித்து வந்த பிரபல நடிகை ஒருவர் தற்பொழுது ஜீ தமிழ் சீரியலில் நடித்து வருகிறார் என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.கொரோனாவின் முதல் அலையின் பொழுது சீரியல்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் மீண்டும் அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பாகும் பொழுது ஒரு சில சீரியல்கள் முன்பு இருந்த சீரியல் பெயருடன் முழுவதும் கதை மாற்றத்துடன் ஒளிபரப்பானது இன்னும் சில சீரியல்கள் புதிதாக அறிமுகமானது அதிலும் முக்கியமாக பிரபலமாக இருந்து வந்த பல சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அந்த வகையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு சீரியல்தான் அரண்மனை கிளி.  இந்த சீரியல் மிகவும் சுவாரசியமாகவும் பல காதல் காட்சிகளும் இடம் பெற்றிருந்ததால் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்திருந்தது. எனவே டிஆர்பி-யியலும் முன்னணி நாடகமாக வலம் வந்த இந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மோனிஷா. இந்த சீரியளுக்கு பிறகு இவர் மற்ற எந்த சீரியல்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் ஜீ தமிழில் ஒரு சீரியலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் சில காலங்களாக ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து ரேஷ்மா விலகவுள்ளார் என்றும் இவருக்கு பதிலாக அரண்மனைக்கிளி மோனிஷா நடிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் இந்த சீரியலில் மோனிஷா இணைந்துள்ளார் என்பது உண்மையான தகவல், ஆனால் ரேஷ்மா விலகவில்லை மோனிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பூவே பூச்சூடவா சீரியலின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

monisha
monisha

Leave a Comment