பூஜா ஹெக்டே இந்த மாதிரி புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.!

Actress Pooja Hegde photo: ஹிந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் எந்த ஒரு தமிழ் படங்களில் நடிக்காத நிலையில் தற்போது அவர் பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹவுஸ் ஃபுல் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இதனை தொடர்ந்து தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் பூஜா ஹெக்டே. இந்தியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் கடைசியாக நடித்து வெளிவந்த வைகுந்தபுரமுலு படமும் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளதால் இவர் பிற மொழி படங்களில் தற்போது தனது கவனத்தை அதிகமாக காண்பித்து வருகிறார்.

இதனால் என்னவோ அவர் தமிழில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தளபதி விஜய் அவர்களுடன் துப்பாக்கி 2 படத்தில் ஹீரோயினாகவும் மற்றொரு ஹீரோயினாக காஜல் அகர்வாலும் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள பூஜா ஹெக்டே அவர்கள் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அரைக்கால் சட்டையுடன் செல்பி எடுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

pooja
pooja

Leave a Comment