விஜய்க்கு செம்ம பொருத்தமான நடிகை பூஜா ஹெக்டே தான்.. தளபதி 66 படத்தில் ஏன் நடிக்க வில்லை தெரியுமா.? தயாரிப்பாளர் சொன்ன தகவல்.!

தளபதி விஜய் வெற்றிகரமாக பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துவிட்டார். படம் இன்று கோலாகலமாக வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது முதல் நாளிலேயே நல்லதொரு வசூலையும் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன இப்படி இருக்க..

நடிகர் விஜய்யோ தனது 66 வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். விஜய் 66 திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். மிக பிரமாண்ட பொருட்செலவில் இந்த திரைப்படத்தை தில் ராஜூ தயாரிக்க உள்ளார் இந்த படத்தில் பூஜை அண்மையில் போடப்பட்டது அப்பொழுது இந்த படத்தின் ஹீரோயினை அறிமுகப்படுத்தியது படக்குழு.

இப்படத்தின் பூஜையின் போது விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கலந்துகொண்டனர். படத்தின் ஷூட்டிங்கும் வெகுவிரைவிலேயே தொடங்கியிருக்கிறது இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இருந்து வெளியாகிறது. அண்மையில் பேட்டி ஒன்றில் தளபதி 66 படம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு கூறியது :

நடிகை பூஜா ஹெக்டே திறமையான நடிகை அதனால் தான் அவரை தளபதி 66 திரைப்படத்தில் நடிக்க வைக்க முதலில் திட்டம் போட்டோம் ஆனால் ஏற்கனவே அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்து விட்டார் அதனால் அடுத்த படத்தில் நடித்தால் அது சிறப்பாக இருக்காது என்ற காரணத்தினால் நாங்கள் ராஷ்மிகா மந்தனா தேர்ந்து எடுத்தோம் என கூறினார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் தொடர்ந்து சூப்பர் ஹிட் வருகின்றன அந்த வகையில் தற்போது தளபதி விஜயுடன் கைகோர்த்து உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் படம் நிச்சயம் நல்லதொரு வெற்றியை ருசிக்கும் என கருதப்படுகிறது.

Leave a Comment