முதல் நாளே பிரம்மாண்டமான வசூலை அள்ளிய “பொன்னியின் செல்வன்” படம் – மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

ponniyin-selvan
ponniyin-selvan

திரை உலகில் பல படங்களை எடுத்து வெற்றி கண்டவர் மணிரத்தினம் இவர் லைக்கா ப்ரொடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் ஆகிய இரு நிறுவனங்களுடன் கைகோர்த்து ஒரு வழியாக பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்துள்ளார் அதை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் முதல் பாகம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பிரகாஷ் ராஜ், ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரபு, கிஷோர், ஜெயராமன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். ஒரு வரலாற்று சரித்திரம் படைத்த வரலாற்று நாவலை படமாக எடுத்து உள்ளதால் இந்த படத்தை பார்க்க நேற்று ரசிகர்களும் மக்களும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை பார்த்தனர்.

படம் எதிர்பார்த்ததை விட பிரமாண்டமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர் இதனால் வருகின்ற நாட்களில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் அதே சமயம் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது.

என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு மட்டுமே 17 கோடியாக இருந்துள்ளது வெளிநாட்டில் முன்பதிவில் 10 கோடியாகும். தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்குகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 550 திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது.

பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக 23 கோடி ரூபாய் முதல் 25 கோடி ரூபாய் வரை வசூலித்திற்கும் என கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் 25 கோடி முதல் 30 கோடி வரை என்றும் உலகம் முழுவதும் 35 முதல் 40 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.