தமிழகத்தில் அடித்து துவம்சம் செய்யும் பொன்னியின் செல்வன்.! 12 நாட்களில் எவ்வளவு கோடி வசூல் தெரியுமா.? வெளியானது முழு கலெக்சன் ரிப்போர்ட்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றுள்ளது என்பதை அதன் வசூலை பொறுத்து தான் மதிப்பிடப்படுகிறது. அப்படிதான் பல திரைப்படங்கள்  அதன் வசூலை வைத்து எந்த இடத்தில் இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்யப்படுகிறது இதன் நிலையில் சமீபத்தில் தமிழர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்

இந்தத் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக வெளியானது. இந்த திரைப்படத்தை மணிரத்தினம் அவர்களை இயக்கியிருந்தார் கல்கி அவர்கள் கதை எழுதி இருந்தார். இதற்கு முன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பல இயக்குனர்கள் எடுக்க ஆசைப்பட்டார்கள் ஆனால் சாத்தியமாக வில்லை  முதன்முறையாக மணிரத்தினத்தால் அது சாத்தியமானது.

மேலும் இந்த திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது அது மட்டும் இல்லாமல் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டினார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை காண இன்றுவரை திரையரங்கில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

அது மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு நாட்களுக்கு முன்பு விசுவாசம் மற்றும் பாகுபலி திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. சமிபத்தில் வெளியாகிய  விக்ரம் திரைப்படத்தின் சாதனையை விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஏனென்றால் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் நல்ல வசூலை பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது தமிழகத்தில்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகிய 12 நாட்கள் ஆன நிலையில் தமிழகத்தில் மட்டும் 178 கோடி வரை வசூலித்துள்ளது விரைவில் இந்த திரைப்படம் 200 கோடி கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடியை கடந்துவிட்ட நிலையில் 500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது இன்னும் திரையரங்கில் ஹவுஸ் ஃபுல்லாக இருப்பதால்  இந்த வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் திரைப்படத்தின் சாதனை விரைவில் முறியடிக்கும் எனவும் இதையும் தாண்டி மிகப்பெரிய மயில்கள்ளை எட்டும் எனவும் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment