பொன்னியின் செல்வன் சிறு வயது நந்தினியாக நடித்த பேபி சாராவா இப்படி.? புகைப்பிடிக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சடைந்த ரசிகர்கள்..

குழந்தை கதாபாத்திரங்களாக அறிமுகமாகி வரும் பல குழந்தைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் ஒரு சில குழந்தை கதாபாத்திரங்கள் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அவர்கள் வளர்ந்தாலும் கூட ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது கதாநாயகிகள் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கும் பிரபல குழந்தை நட்சத்திரம் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் சில கதாபாத்திரங்கள் தற்பொழுது வளர்ந்து முன்னணி நடிகைகளை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு நடித்து வருகிறார்கள்.

குறிப்பாக பேபி அனிகா இவரை அடுத்து தற்போது மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருபவர் தான் பேபி சாரா. விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் பேபி சாரா. இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பு வெளிப்படுத்து இருந்தார்.

baby sara
baby sara

இதனால் பாராட்டுகளையும் பெற்ற இவர் சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இதனை அடுத்து கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் சிறுவயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

baby sara 1
baby sara 1

இவ்வாறு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த இவர் தற்பொழுது அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக பேபி சாரா நடித்துள்ள காட்சியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இவர் ‘கொட்டேஷன் கேங்’ என்னும் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் காட்சி ஒன்றில் பேபி சாரா புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்று உள்ளது. எனவே அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பேபி சாரா இப்படி செய்வது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்

Leave a Comment