வசூலில் புதிய உச்சத்தை தொட்ட “பொன்னியின் செல்வன் படம்” – 5 நாள் முடிவில் மட்டுமே இத்தனை கோடியா.?

அண்மை காலமாக சிறந்த இயக்குனர்கள் பலரும் வரலாற்று மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து படங்களை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் இதுவரை எத்தனையோ உண்மை மற்றும் நாவல்களை மையமாக வைத்து படங்களை இயக்கி இருக்கிறார் அந்த படங்களும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இப்போ கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து இருக்கிறார். இந்த படத்தை 500 கோடி பொருள் செலவில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும்  லைக்கா நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, ஜெயராம், விக்ரம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படத்தை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு படத்தைப் பார்த்தனர் எதிர்பார்த்த விட மிக பிரம்மாண்டமாக இருந்ததால் ரசிகர்களும், மக்களும் இந்த படத்தை கொண்டாடியதோடு..

மட்டுமல்லாமல் நல்ல விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர் அதனால் இந்த படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது ஏற்கனவே நான்கு நாட்கள் முடிவில் மட்டுமே 247 கோடிக்கு மேல் அள்ளியது. வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அள்ளும் என கணிக்கப்பட்ட நிலையில் 5 நாட்கள் முடிவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் ஒட்டுமொத்தமாக ஐந்து நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் சுமார் 270 கோடி வரை  வசூலித்திருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. வெகு விரைவிலேயே 500 கோடியை தொட்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு புதிய சாதனை படைக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

Leave a Comment