பொன்னியின் செல்வன் படம்.. ஏன் பாகுபலி படம் போல் பிரம்மாண்டமாக இல்லை – ரசிகர்களுக்கு புரியும்படி சொன்ன மணிரத்தினம்.!

இயக்குனர் மணிரத்தினம் 80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு சிறந்த படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார் இருப்பினும் மணிரத்தினதிற்கு பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பதே கனவு அதற்காக பல தடவை முயற்சி தரும் தோல்வியை மட்டுமே அவர் கண்டார்.

இருப்பினும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடினார் ஒரு வழியாக பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்திருக்கிறார் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர்.

இந்த படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் 60 கோடி வசூலிக்கும் என கூறப்படுகிறது அடுத்த அடுத்த நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து மணிரத்தினம் பேசி உள்ளது. ராஜராஜ சோழன் என்பவர் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அரசராக இருந்தவர் அவரைப் பற்றி திரைப்படம் எடுக்கும் பொழுது அது தத்ரூபமாக இருக்க வேண்டும் இந்த படத்தில் பயணிக்கும் கதாபாத்திரங்கள் உண்மையாக இருக்க வேண்டும் இந்த கதையை வந்தியேதேனிலிருந்து  இருந்து தான் தொடங்குகிறது.

இப்படிப்பட்ட வரலாற்று கதையை படமாக்கும் பொழுது யதார்த்தமாக இருந்தால் தான் அது நன்றாக இருக்கும் அதனால் தான் இதில் பாகுபலி போன்ற கற்பனை சார்ந்த விஷயம் இல்லை இதில் சூப்பர் ஹீரோக்கள் இருக்க மாட்டார்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் பாடல்கள் என எல்லாமே உண்மையாக இருக்கும்.. அதனால் தான் பாகுபலியும், செல்வனும் வெவ்வேறு ஜெனரல் உருவாகியுள்ள படங்கள் என கூறினார்.

Leave a Comment