பெண்கள் தினத்தை முன்னிட்டு சூபர் வீடியோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

கல்கியின் நாவலை கல்வி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் மேலும் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி திரையில் வெளியாகிரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலிலும் 500 கோடி வரை வசூலித்து சாதனை படைத்திருந்தது.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது பட குழு போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் மிக தீவிரமாக பணிபுரிந்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒரு கிளிம்ஸ் வீடியோவையும் சமீபத்தில் பட குழு வெளியிட்டு இருந்தது அதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படக்முழு தற்போது ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டு இருக்கிறது இதை பார்த்த ரசிகர்கள் சந்தோசத்தில் பொங்கி வருகிறார்கள்.

அந்த வீடியோவில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ள பெண் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு வகையும் காட்சிப்படுத்தி மொத்தமாக வெளியிட்டு இருக்கிறார்கள் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

Leave a Comment