அண்மை காலமாக சினிமா உலகில் மிகப் பிரமாண்டமான பட்ஜெட்டில் பல படங்கள் வெளிவந்து படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி பல கோடி லாபம் பார்த்து அசத்துகின்றன அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார்.
படம் நீளமாக இருக்கின்ற காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார் அதன்படி பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது இந்த படத்தை பார்க்க இந்தியா முழுவதும் பலர் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
அதை பூர்த்தி செய்யும் வகையில் பிரம்மாண்டமாக படத்தை எடுத்திருந்தார். படம் நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பார்த்திபன், விக்ரம், கிஷோர், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ரகுமான், பாபு ஆண்டனி, மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.
தொடர்ந்து வசூலில் ருத்ரதாண்டவம் ஆடும் பொன்னியின் செல்வம் பல்வேறு இடங்களில் சாதனைகளை படைத்து வருகிறது அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பல படங்களின் சாதனை முறையடித்து அசத்தி இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம் 9 நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 158 கோடி வசூலித்து இருக்கிறாம்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் 153 கோடி வசூல் செய்த பாகுபலி படத்தின் சாதனையை தோற்கடித்து தற்பொழுது முன்னேறி இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற நாட்களிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் தவிர குறையாது என கணக்கிடப்பட்டிருக்கிறது. இதனால் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்த தயாரிப்பாளரும் சரி படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறதாம்.