பொன்னியின் செல்வன் 2 : ஏற்றுக்கொள்ள முடியாத 5 தவறுகளை செய்துள்ள மணிரத்தினம்.! இது என்ன புது உருட்டா இருக்கே..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் மணிரத்தினம் பல இயக்குனர்கள் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க அதிக ஆர்வம் காட்டினார்கள் ஆனால் மணிரத்தினத்தின் கைவண்ணத்தால் தான் அது சாத்தியமானது இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரியதளவில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 5 பாகங்களையும் புத்தகங்களாக படித்து பலமுறை அந்த கதையில் ஊறி திரிந்த ரசிகர்களுக்கு இயக்குனர் மணிரத்தினம் இஷ்டத்துக்கு கதையை திரித்துள்ளது. கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. வாம்மா மின்னல் என்று வந்து போன நிலையில் கிளைமேக்ஸ் கதையில் ரசிகர்களுக்கு பலத்தை ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. அந்த வகையில் மணிரத்தினம் கதையை மாற்றி அமைத்ததால் ஏற்பட்ட ஐந்து தவறுகள் குறித்து இங்கே காணலாம்.

1. சிறு வயது நந்தினியாக சாரா அர்ஜுன் நடித்திருந்தாலும் அவர் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் ரசிகர்களை மயக்கிய படியிருந்தாலும் ஆனால் இளம் வயது ஆதித்யகரிகாலனாக வரும் நடிகரின் நடிப்பு கொஞ்சம் கூட எடுபடவில்லை. அதேபோல் அவர்கள் இருவருக்கும் ஆழமான காதல் இருந்ததை மணிரத்தினம் சொல்ல மறந்து விட்டார் இளம் வயதிலேயே போருக்கு செல்லும் ஆதித்ய கரிகாலனுக்கு ஒரு சில நொடிகள் கூட அவர் போருக்கு போகுதால் போல் காட்சியை காட்டி இருக்கலாம்.

2. நந்தினியாக ஐஸ்வர்யா ராய் மிரட்டியதை காட்டிலும் உமை ராணியாக இன்னும் சிறப்பாக மிரட்டி இருக்கலாம். சுந்தர சோழர் மற்றும் மந்தாகினி தேவியின் கதையை எப்படி முதல் பாகத்தில் பொன்னியின் செல்வன் டைட்டிலுக்கே நீதிசெய்யாமல் குகை ஓவியங்களில் காட்டி முடித்தாரோ அதேபோல் திரிஷாவின் தலையை சுற்ற வைத்து நம் தலையை காய வைத்து முடித்தார்.

3. ஆதித்ய கரிகாலனை யார் கொன்றது என்பதற்கு விடை கொடுக்கிறேன் என முயற்சி செய்து நாவலை படித்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டார் மணிரத்தினம் இதனை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது நந்தினி மீதான பித்து காரணமாக அவர் மரணம் நிகழ்ந்துள்ளது என்கின்ற காட்சி மிகப் பெரிய பிழை எனவும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் விலாசுகிறார்கள்.

4. அதேபோல் சேத்தான் அமுதனை கடைசி வரை டம்மியாகவே காட்டி விட்டார்கள். பூக்கட்டும் நபராகவே கடைசி வரை காட்டியது ஏனென்றே தெரியவில்லை அதுமட்டுமில்லாமல் படத்தின் கிளைமாக்ஸ் வரை பார்த்த அனைவருக்கும் கொழுந்து விட்டு எரிகிற ஒரே கேள்வி பொன்னியின் செல்வன் கதையில் மிகப்பெரிய டிவிஸ்டாக  இருந்த விஷயத்தை ஏன் இப்படி வேண்டுமென்றே கைவிட்டு விட்டார் மணிரத்தினம் எனக் கேள்வி கேட்கிறார்கள் ரசிகர்கள்.

5. பொன்னியின் செல்வன் நாவலில் எழுதப்பட்ட நந்தினி முடிவிற்கும் இங்கே மணிரத்தினம் படத்திற்காக வைக்கப்பட்ட நந்தினி முடிவிற்கும் ஒத்தே வரவில்லை இதை பார்த்து அதிர்ச்சி தான் ஆனார்கள் ரசிகர்கள். இரண்டு பாகங்களையும் ஒட்டுமொத்த கதையையும் முடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்தாரா அல்லது புனைவு கதை தானே நாமும் கொஞ்சம் புனைத்து பேசலாம் என திரித்துவிட்டாரா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வம் நாவலை ரசித்து ருசித்து படித்தவர்களுக்கு ஒரு முழுமையை தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Comment