பொன்னியின் செல்வன் 2 முதல் பாடல் இன்று வெளியிடை.! உற்சாகத்தில் ரசிகர்கள்…

கல்கியின் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கிய உள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால் இவருக்கு முன்பே பொன்னியின் செல்வன் திரைக்கதையை எம்ஜிஆர் அவர்கள் இயக்க இருந்தார். அது மட்டுமல்லாமல் இந்த படம் ஒரு அனிமேஷன் படமாக உருவாக இருந்தது.

எம்ஜிஆர் மட்டுமல்லாமல் பல இயக்குனர்களும் பொன்னியன் செல்வன் கதையை திரைப்படமாக மாற்ற பலரும் முயற்சி செய்தார்கள் ஆனால் அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் இந்த படத்தை எடுக்க முடியாமல் போனது அதன் பிறகு தான் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இந்த படத்தை கடந்த ஆண்டு இயக்கி இருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகம் இந்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது பாகத்திலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பட குழு முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவித்திருந்தது அந்த வகையில் இன்று மாலை இந்த பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பொன்னின் செல்வன் 2 திரைப்படத்தின் போஸ்டரும் சமீபத்தில் வெளியானது அந்த வகையில் நடிகை திரிஷா அவர்கள் கையில் வாளை ஏந்தியபடி நிற்க கார்த்தி அவர்கள் கண்ணை துணியால் கட்டிக்கொண்டு மண்டியிட்டு இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி அவர்கள் வந்திய தேவன் கதாபாத்திரத்திலும் திரிஷா அவர்கள் குந்தவை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 29ஆம் தேதி சென்னை நேரு உள்ள விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி மற்றும் கமல் ஆகியோரை அழைக்க அழைப்பு விடுத்துள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது என்றே சொல்லலாம். படம் இந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவர இருப்பதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும் கூறபடுகிறது.

Leave a Comment

Exit mobile version