ஏழு நாட்களில் பிரம்மாண்ட வசூல் செய்த பொன்னியின் செல்வன்-2.! ஆனாலும் கிட்ட நெருங்க முடியலையே…

0
pommiyin selavan 2
pommiyin selavan 2

ஐஸ்வர்யா ராய், விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், பார்த்திபன் விக்ரம் பிரபு, சரத்குமார், நாசர், நிழல்கள் ரவி, மோகன் ராமன், ராதாகிருஷ்ணன், வினோதினி, ஜெயராம் ,ஜெய சித்ரா ,ரகுமான் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் தமிழ் திரைப்படத்தை தலை நிமிரச் செய்தது ஏனென்றால் அந்த சமயத்தில் மற்ற மொழி திரைப்படங்கள் தமிழில் அதிக ஆதிக்கம் செலுத்தி வசூலிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது அதையெல்லாம் உடைத்தெறிந்தது பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த நிலையில் கடந்த வாரம் பொன்னின் செல்வன் இரண்டாவது பாகம் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் முதல் காட்சியில் இருந்து சற்று சில கலவையான விமர்சனம் கிடைத்தாலும் முதல் நான்கு நாட்கள் நல்ல வசூலை பெற்று கொடுத்தது நான்கு நாள் முடிந்த பிறகு கணிசமாக வசூல் குறைய தொடங்கியுள்ளது. இதன் நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 7 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 235 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 85 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது ஆனால் இதில் என்ன ஒரு கவலையான விஷயம் என்றால், முதல் பாகத்தின் வசூலை விட இரண்டாவது பாகத்தின் வசூல் கொஞ்சம் குறைவு தான்.

பெரும்பாலும் இரண்டாவது பாகம் வசூலில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொஞ்சம் சருக்களை சந்தித்து வருகிறது.