சரியான நேரம் பார்த்து “ஆடியோ ரைட்ஸ்” விற்ற பொன்னியின் செல்வன் – எத்தனை கோடிக்கு போனது தெரியுமா.?

சினிமா உலகில் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் பல்வேறு நாவல் மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து பல கதைகளை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார் இருப்பினும் அவரது கனவு பொன்னியின் செல்வன் படத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்பதுதான் அந்த ஆசையை தற்போது நிறைவேற்றியும் இருக்கிறார்.

மணிரத்தினம். இவர் இயக்கத்தில் 500 கோடி பொருட்செலவில் உருவாக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் முதல் பாகம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம், பார்த்திபன், ஜெயராஜ், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா மற்றும் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது 500 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த பொன்னியின் செல்வன்  படம்  வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

படம் வெளிவருவதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்திழுக்க பட குழு தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவற்றை வெளியிட்டு வந்தது நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து விட்டது மிக பிரம்மாண்ட புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுத்துள்ளனர் படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பாக இருக்கிறது.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் அதிகரித்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ உரிமை மட்டும் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது மட்டுமே மிகப்பெரிய ஒரு கோடிக்கு விலை போய் உள்ளதாம். ஆம் பொன்னியின் செல்வன் ஆடியோ உரிமை மட்டும் சுமார் 24 கோடிக்கு டிப்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

படம் வெளி வருவதற்கு முன்பாகவே நல்ல கல்லா கட்ட ஆரம்பித்தது பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில்  வெளியாகுவதால் நிச்சயம் மிகப் பிரமாண்டமான ஒரு வசூலை அள்ளும் என கூறப்படுகிறது.

 

Leave a Comment