பொன்னியின் செல்வன் பிரபலங்களுக்கு ட்ரீட் தரும் கமல்.! அதுவும் எப்படி தெரியுமா.?

பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் வரலாற்று கதையை படமாக காண்பித்த இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு பல சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்த வரலாற்று சார்ந்த இந்த திரைப்படம் சோழர்களின் அடிப்படை பற்றி பேசுகிறது மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த பல சினிமா பிரபலங்களுக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மணிரத்னம் அவர்கள் இரண்டாம் பாகத்தின் வேலைகளை தொடங்கி விட்டதாகவும் தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த பிரபலங்களுக்கு கமல்ஹாசன் ட்ரீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் அதாவது வேளச்சேரி ஐ மேக்ஸ் திரையரங்கில் இன்று மாலை 7 மணி காட்சி அனைத்தையும் முன்பதிவு செய்துள்ளாராம் கமல்ஹாசன். பட குழுவினரிடம் சேர்ந்து பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்க்க உள்ளார் என இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இவர் நடித்துள்ள பிரபலங்களுடன் சேர்ந்து பார்ப்பது ஒரு அதிசயம் தான் என்று பல ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

vikram karthi
vikram karthi

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் கோடையில் வெளியாகும் என மணிரத்னம் அவர்கள் கூறியுள்ளதாகவும் இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment