பொன்னியின் செல்வன் எங்களுடைய டார்கெட் கிடையாது.? நானே வருவேன் பட தயாரிப்பாளர் அசத்தலான பேச்சு..!

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவன்னுடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆகிருகிக்கிறது இந்த படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருடன் கைகோர்த்து செல்வராகவன்.

மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து உள்ளனர் இந்த படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த போஸ்டர், டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் வேற லெவலில் கொண்டாடப்பட்டது. அதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து உள்ளது. நானே வருவேன் திரைப்படம் வருகின்ற 29ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அடுத்த நாளான 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களில் பொன்னியின் செல்வன் படத்தில் காண எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்ய என்ன காரணம் என தயாரிப்பாளர் தாணுவிடம் சமீபத்தில் கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதில் அவர் அளித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கும் எங்களுக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை ஜூன் மாதம் இந்த முடிவை எடுத்துவிட்டேன் லைகா தமிழ் குமரனுக்கும் அது தெரியும் நான் எனது அசுரன் படத்தை இந்த ஆயுத பூஜை சமயத்தில் தான் ரிலீஸ் செய்தேன் இந்த முறையும் இந்த ஒன்பது நாள் விடுமுறையை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை..

அதேபோல் நானே ஒருவன் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி இல்லாததற்கான காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார் அசுரன், கர்ணன் போன்ற படங்கள் அதிகாலை காட்சி திரையிடப்படவில்லை எட்டு மணி காட்சி தான் போட்டோம் ஏனென்றால் அந்த காட்சியில் தான் உலகம் முழுக்க அனைவராலும் பார்க்க முடியும்..  இளைஞர்கள் அதிகாலையிலேயே அவசர அவசரமாக வந்து பார்க்கிறார்கள் அதெல்லாம் வேண்டாம் என்பதற்காகத் தான் 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என கூறினார்.

Leave a Comment