வெளிநாட்டிகளில் மட்டுமே கோடிகணக்கில் வசூல் செய்த பொன்னியின் செல்வன் படம் – மொத்தம் இத்தனை கோடியா.?.?

சினிமா உலகில் ஒரு படம் வெற்றி பெற முக்கியம் நல்ல விமர்சனம் தான் அதை மக்கள் கொடுத்து விட்டால் போதும் ஆட்டோமேட்டிக்காக அந்த படம் வெற்றியை பெறும்.. அதை நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் தான் மணிரத்தினம் 500 கோடி பொருட்ச அளவில் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்திருந்தார்.

இந்த படம் நேரம் அதிகம்  இருப்பதன் காரணமாக இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார். முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், த்ரிஷா, விக்ரம் , கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு,பிரகாஷ்ராஜ் , ஜெயம்ரவி, ஜெயராம், கிஷோர் மற்றும் பல பிரபலங்கள்நடித்து இருந்தனர்.

500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் படம் நல்ல விமர்சனத்தை பெறுமா.? என்பது பலருக்கும் கேள்விக்குறியாக இருந்தது ஆனால் படம் வெளிவந்து  எதிர்பார்த்ததைவிட அற்புதமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுக்க ஆரம்பித்தனர் அதன் விளைவாக இந்த படத்தின் வசூலும் ஆட்டோமேட்டிக்காக அதிகரிக்க ஆரம்பித்தது.

முதல் நாளில் 80 கோடி அடுத்த நாளில் 70 கோடி அடுத்த மூன்றாவது நாளும் கணிசமான வசூலை அள்ளி உள்ளது மூன்று நாட்களில் மட்டுமே ஒட்டுமொத்தமாக 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. வருகின்ற நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படத்தின் வசூல் குறையாது என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வெளிநாடுகளிலும்..

பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் நன்றாகவே இருந்து வந்துள்ளது இதுவரை மட்டுமே வெளிநாட்டில் 100 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. போகின்ற நிலைமை பார்த்தால் மிகப்பெரிய ஒரு வசூல் அதாவது பாகுபலி டஃப் கொடுக்கும் என பலரும் கூறி வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..

Leave a Comment