அதிகாரப்பூர்வமாக ரசிகர்கள் இதுவரை பார்க்காத வீடியோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு.!

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் பல பிரபலங்களும் எதிர்பார்த்து வரும் திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மட்டும் தான் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் முதல் பாகம் வெற்றிகரமாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து இருந்தது.அதனை தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும்.

என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வெளியாக இருக்கிறது குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களுமே ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக தற்பொழுது படக்குழு  பல ஊர்களுக்கு சென்று வருகிறார்கள் இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய வீடியோவை படகுழு ஒன்று வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்தது போல் இந்த இரண்டாம் பாகத்திலும் பின்னணி குரல் கமல்ஹாசன் கொடுத்துள்ளார்.

அவர் குரலை வைத்து முதல் பாகம் எப்படி சுவாரசியமாக நடந்தது அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்பதை பட குழு ரசிகர்களுக்கு ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்கள் மேலும் அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment