முக்கிய நாவல்களை தழுவி படமாக எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் இதுவரை இயக்கிய பல படங்களும் முக்கிய படங்களாக மாறிய நிலையில் அண்மையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன், சரத்குமார்..
த்ரிஷா ஐஸ்வர்யா ராய் போன்ற பல சிறந்த நடிகர் நடிகைகளை வைத்து பொன்னியின் செல்வன் என்னும் படத்தை இயக்கினார். இந்த படம் கல்கி என்னும் நாவலைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சினிமாவில் உள்ள பலரும் இயக்க ஆசைப்பட்டனர் ஆனால் ஒரு வழியாக அதனை செய்து காட்டியதை இயக்குனர் மணிரத்தினம் தான்.
பல கோடி செலவில் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கினார் இதன் முதல் பாகம் சென்ற ஆண்டு இறுதியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 500 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இதனைத் தொடர்ந்து பொன்னியன் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்று மக்களிடையே வெற்றி அடைந்தது அதனால் அதன் இரண்டாம் பாகத்தைக் காணவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் படம் பெரியளவு வசூலை ஈட்டவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த திரைப்படம் வசூலில் இதுவரை 350 கோடியை கூட தாண்டவில்லை.
இந்த நிலையில் இந்தியில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த திரைப்படம் ஹிந்தியில் 17.39 கோடி வரை வசூலித்து தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்தியில் பொன்னின் செல்வன் 2 திரைப்படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என வியப்பாகியுள்ளனர். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.