சூட்டிங் ஸ்பாட்டில் கெத்தாக இருக்கும் மணிரத்னம்.! PS2 படப்பிடிப்பு வீடியோ இதோ.!

இன்று பல திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இரண்டாம் பாகம் மிரட்டலாக வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்களும் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்று திகழ்ந்து வருகிறார்கள்.

பொதுவாகவே இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தான் இயக்கும் திரைப்படங்களை அபூர்வமாக ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் யாருமே எடுத்திராத காட்சிகளாக மணிரத்னம் அவர்கள் தனது திரைப்படத்தில் வைத்திருப்பார். அந்த வகையில் பார்த்தால் பல வருடங்களாக பொன்னியின் செல்வன் கதையை எப்படியாவது படமாக எடுக்க வேண்டும்.

என்று பல சினிமா பிரபலங்களும் ஆசைப்பட்டு வந்தார்கள். ஆனால் அவர்களால் முடியாமல் தற்பொழுது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்து இரண்டாம் பாகம் தற்பொழுது வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்த இரண்டாம் பாகத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருவதால் கூடிய சீக்கிரம் படம் அதிகம் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்களும் தங்களது அடுத்தடுத்த திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கும் நிலையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடைபெற்ற சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

சிறிய வீடியோவாக இருந்தாலும் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து மிகவும் எளிமையாக இந்த இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் என்பது போல் தெரிகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அதனால் இந்த திரைப்படத்தையும் அவர் ரசிகர்களுக்கு அபூர்வமாக காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் கதையை நன்கு அறிந்து இந்த பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் எடுத்துள்ளார் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment