பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் குறித்து வெளியான தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.?

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, பிரபு, சரத்குமார், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, கார்த்தி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு தகவல்கள் வெளியாகி இருக்கிறது அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் ட்ரெய்லர் வருகின்ற மார்ச் 28ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் மார்ச் மாதம் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் இடம் பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இதனை தொடர்ந்து மேலும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது அதாவது முதல் பாடலை ஒரு சில வாரங்களில் வெளியிட உள்ளதாகவும் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல்வேறு இடங்களில் சென்று படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment