சொதப்பலில் பொன்னியின் செல்வன் 2 .! மணிரத்தினத்தை கொம்பு சீவிவிடும் தயாரிப்பு நிறுவனம்…

0
ponniyin-selvan 2
ponniyin-selvan 2

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள், மக்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் பொன்னின் செல்வன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் இரண்டு பாகங்களாக உருவாக்கி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி உள்ள நிலையில் இரண்டாவது பாகம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பின் போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி  திரைக்கு வந்து 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பார்த்தது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், என பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள்  நடித்துள்ளது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளை மாற்றவும் விடுபட்ட சில காட்சிகள் உள்ளதால் மீண்டும் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக தகவல் பரவி உள்ளது. இது குறித்து பட குழுவினர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அமைந்துள்ள காட்சிகள் திருப்தியாக இல்லை என்றால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாம் என மணிரதினதிற்க்கு கொம்பு சீவி விட்டுள்ளது.