அட குளிக்கும் இடத்தில் கூட பொன்னியின் செல்வன் பாடலா.! வைரலாகும் வீடியோ.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக கடந்த 30ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டது.

மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர் பலரும் கேட்டு வந்த கேள்விக்கு இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் கோடையில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் வரும் பாடல்களில் பொன்னி நதி பாடல் நடிகர் விஜய்க்கு கூட மிகவும் பிடிக்குமாம் இந்த திரைப்படத்தில் இருந்து வெளிவந்துள்ள பொன்னி நதி பாடல் தான் தற்பொழுது வரை youtube-ல் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தீம் பார்க் நீச்சல் குளத்தில் குளிக்கும் அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக டிஜே வைத்து ப்ளே செய்துள்ளனர் அதற்கு அங்கிருந்த மக்களும் சிறப்பாக பின்னிசை பாடியுள்ளார்கள்.

அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பொன்னி நதி பாடல் இன்னும் பல மாதங்கள் வரை ட்ரெண்டாகிக் கொண்டே வரும் அதில் எந்த ஒரு மாற்றமே இல்லை எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://twitter.com/arr_forever/status/1577935511356084224?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1577935511356084224%7Ctwgr%5E552b913cfb9a1de7527a667eb90663418ec909bf%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fponni-nadhi-song-in-swimming-pool-1665125053

Leave a Comment