ரிலீசுக்கு முன்பே 149 கோடி வசூல் செய்த “பொன்னியின் செல்வன்”..! செம்ம குஷியில் மணிரத்தினம்.!

தமிழில் பெரிதும் உண்மை சம்பவங்கள் நாவல்களை தழுவி படங்களை இயக்கி வெற்றி கண்டு வரும் இயக்குனர் மணிரத்தினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க நீண்ட வருடங்களாக ஆசைப்பட்டு வந்தார் இதனை படமாக்க இரண்டும் முறை முயற்சித்து தோல்வியை சந்தித்ததை எடுத்து மூன்றாவது முறை வெற்றிகரமாக பொன்னியின் செல்வன் என்னும் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்தினம்.

இந்த படத்தை எடுக்க பலரும் நினைத்து யாராலும் முடியாத பட்சத்தில் மணிரத்தினம் இதனை செய்து முடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பார்த்திபன் போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

படம் ஐந்து மொழிகளில் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் தமிழில் பிரபலம் அடைந்துள்ளதால் படம் தமிழ் மொழியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் மற்ற மொழிகளில் எந்த அளவு வரவேற்பை பெறும் என்பது சற்று கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியன் செல்வன் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல டிப்ஸ் நிறுவனம் 24 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் டிஜிட்டல் உரிமையையும் அமேசான் ஓடிடி நிறுவனம் 125 கோடி கொடுத்து கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் இதற்கு முன்னே பொன்னியன் செல்வன் படத்தின் டிஜிட்டல் உரிமையை hotstar ஓடிடி நிறுவனம் வாங்குவதற்கு முயற்சிகளில் மேற்கொண்டது ஆனால் அமேசான் நிறுவனம் முந்திக்கொண்டு வாங்கியுள்ளதால் hotstar ஓடிடி நிறுவனம் புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment