பொன்மகள் வந்தாள் திரைவிமர்சனம்.!

Ponmagal Vandhal review: கொரோனா ஊரடங்கு உத்தரவை இல்லை என்றால் பொன்மகள் வந்தாள் திரைப்படம் இன்று திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டு இருக்கும், ஆனால் ஊரடங்கு உத்தரவால் தற்பொழுது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

படம் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட இருந்தால் முதல் காட்சி முதல் ஷோ என ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி இருப்பார்கள் ஆனால் தற்பொழுது கொண்ட வழியில்லாமல் போய்விட்டது. பரவாயில்லை பொன்மகள்வந்தாள் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

படத்தின் கதை

ஊட்டியில் தொடர்ச்சியாக குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் அதை வட இந்திய பெண் ஜோதி தான் கடத்துகிறார் என்றும் காப்பாத்த வந்த இருவரை சுட்டுக் கொள்கிறார் பின்பு போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்படுகிறார் சக்திஜோதி அதிலிருந்து கதை ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக குழந்தை கடத்தப்படுவதால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்படுகிறது.

ஆனால் ஜோதி மீது எந்த தவறும் இல்லை என்று 2004ஆம் ஆண்டு மீண்டும் இந்த வழக்கை பெட்டிஷன் மூலம் பெத்துராஜ் என்பவரின் கதையாகும். இந்த கேசை பாக்யராஜ் தான் அதை கையில் எடுக்க, பாக்கியராஜ் மகள் ஜோதிகா இந்த கேசை எடுத்து வாதாடுகிறார், இதில் முக்கிய தொழிலதபர் ஒருவர் ஈடுபடுவதால் அவருக்காக வக்கீலாக பார்த்திபன் ஆஜராகிறார். மேலும் நீதிபதியாக பிரதாப் போத்தன் நேர்மையாக நடந்து கொள்கிறார் இந்த திரைப்படம் நேர்கொண்டபார்வை போல கோர்ட் டிராமாவாக ஆரம்பிக்கிறது.

முதல் பாதியில் இன்வெஸ்டிகேஷன் பல டிவிஸ்டுகள் என மிகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது, ஒரு காலகட்டத்தில் ஜோதி வட இந்திய பெண் இல்லை அவள் மதுரையை சேர்ந்தவர் கணவனை ஆவணக்கொலையால் இழந்தவள் என ஆதாரங்களை அடுக்குகிறார்,

இந்த கேசை இவ்வளவு ஆர்வமாக ஜோதிகா எதற்காக எடுத்து நடத்துகிறார்கள் ஜோதிக்கும் ஜோதிகா அவருக்கும் என்ன சம்பந்தம்.?  ஜோதிகா அதன்பின நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வருகிறார், அதனால் பார்த்திபன் தனது வாதத்தால் ஜோதிகாவை மடக்க ஒருபுறம் முயற்சி செய்கிறார்.

அதேபோல் எங்கு நாம் சிக்கி விடுவோமோ என தொழிலதிபர் தன்னுடைய பண பலத்தால் அனைத்தையும் மறைக்க முயற்சி செய்கிறார், இவர்களை எப்படி ஜோதிகா சமாளிக்கிறார், இவர்களை சமாளித்து கேசை முடித்தாரா என்பது மீதி கதை.

ஜோதிகா இந்த திரைப்படத்தில் ஐந்து மூத்த நடிகர்களுடன் நடித்துள்ளார், இளம் இயக்குனர் என்றாலும் இயக்குனர் கதையை அழகாக செதுக்கி உள்ளார் சமீபகாலமாக ஜோதிகா சமூக அக்கறை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதேபோல் இந்த திரைப்படமும் ஜோதிகாவிற்கு நல்ல படமாக அமைந்துவிட்டது.

ஜேஜே பெட்ரிக் அவர்கள் இயக்கிய பரபரப்பான திரைப்படத்திற்கு பாராட்டும் புகழும் கண்டிப்பாக கிடைக்கும், அதேபோல் பார்த்திபன் தன்னுடைய கதாபாத்திரத்தை மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார்.

சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் முதல் பாதி படத்தை பரபரப்பாக இயக்கியுள்ளார், இந்த திரைப்படம் பாலியல் வன்கொடுமை அதிகம் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் ஆண் வர்க்கத்திற்கு பெண்ணின் வலியை உணர்த்தும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது, அதுமட்டுமில்லாமல் பெண்கள் தைரியமாக தங்களின் உரிமைக்காக போராட வேண்டுமென கூறுகிறது இந்த திரைப்படம்.

பொன்மகள் வந்தாள் – 3/5

Leave a Comment