கடல்போல் திரண்ட கூட்டத்தை பார்த்து மிரண்டுபோன போனிகபூர்.! வைரலாகும் தல 61 அப்டேட்..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்திற்காக பல கோடி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என்று ஏராளமானோர் மிகவும் ஆர்வமாக காத்து வருகின்றனர். ஏனென்றால் அஜித்தின் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டிற்கு மேலாகியும் இதுவரையிலும் அஜித் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவராத காரணத்தினால் ரசிகர்கள் அனைவரும் அஜித்தின் அடுத்த திரைப்படத்திற்காக ஆவலாக காத்து வருகின்றனர்.

வலிமை இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.  அதோடு இத்திரைப்படத்தின் பற்றிய பெரிதாக தகவல்கள் வெளி வராமல் இருந்த நிலையில் சமீப காலங்களாக தொடர்ந்து திரைப்படத்தின் அப்டேட்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் தான் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்தது.

இப்படிப்பட்ட நிலையில் சமிபத்தில் Glimpse வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். இந்த வீடியோ மிகவும் டண்டிங்கான நிலையில் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்ததால் திரைப்படத்தில் பணியாற்றிய பலரும் இத்திரைப்படத்தினை பற்றி பேட்டிகள் அளித்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் ஆங்கில இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் போனிகபூர் நடிகர் ஒருவருக்கு இப்படி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருப்பதை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை என்று பெருமையாக அஜித்தைப் பற்றி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வலிமை திரைப்படம் மிகவும் அருமையாக வந்திருப்பதாகவும் அஜித்தின் அடுத்த திரைப்படமான 61வது திரைப்படத்தையும் நான் தயாரிக்க வினோத் இயக்க இருப்பதாகவும் வலிமை திரைப்படத்தை விடவும் அஜித்தின் 61ஆவது திரைப்படம் டபுள் மடங்கு ஆக்சன் படமாக இருக்கும் என்றும் கூறி  ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Leave a Comment