இன்று போட்டி போட்டுக் கொண்டு வெளியாகியுள்ள 4 திரைப்படங்கள்.! தனுசை அசைத்துப் பார்க்க நினைக்கும் மூன்று நடிகர்கள்..

pongal release 4 movie : தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நான்கு நாட்கள் கோலகாலமாக கொண்டாட இருக்கிறார்கள் இந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி அன்று திரையரங்கில் நான்கு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன இதனை மக்கள் பார்த்து மகிழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் பொழுதுபோக்கிற்காக படம் பார்க்க வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் மில்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர் இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது அதற்கு காரணம் தனுஷ் இந்த திரைப்படத்தில் மிரட்டல் ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ளார் ஜனவரி 12ஆம் தேதி இன்று இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது படத்தில் பிரியங்கா மோகன், சந்திப் கிஷான், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

அயலான்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக சில பிரச்சனைகளால் தாமதமாகிக் கொண்டிருந்தது அது மட்டும் இல்லாமல் அதிக அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இந்த திரைப்படத்தில் இருக்கிறது 4500 க்கும் மேற்பட்ட வி எஃப் எக்ஸ் காட்சிகளும் இந்த திரைப்படத்தில் உள்ளது அதேபோல் முழு நீள லைவ் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தில அதிகரித்துள்ளது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

மெரி கிறிஸ்மஸ்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மெரி கிறிஸ்மஸ் இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி இன்று வெளியாகி உள்ளது படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள்.

மிஷன் சாப்டர் 1

ஏ எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மிஷன் சாப்டர் 1 இந்த திரைப்படம் இன்று தான் வெளியாகி உள்ளது மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். இப்படி நான்கு திரைப்படங்களும் அடுத்தடுத்து ஒரே நாளில் வெளியாகியுள்ளதால் யார் திரைப்படம் வெற்றி பெறும் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள்.