பொங்கலுக்கு எங்கள் திரையரங்கில் வலிமை படம் வெளியாவது உறுதி – மாஸ் காட்டும் திரையரங்கம் உற்சாகத்தில் தல ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் படங்கள் முக்கிய நாட்களில் வெளி வருவது வழக்கம் அதனால் நல்ல கல்லா கட்ட முடியும் என்பது படக்குழுவின் கணிப்பாக இருந்து வந்துள்ளது மேலும் டாப் நடிகர்களும் அதையே விரும்புகின்றனர்.

ஆனால் ரசிகர்கள் பண்டிகை நாட்களில் முக்கிய இரண்டு திருமலை படங்கள் வந்தால் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் இப்படித்தான் நடிகன் படம் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுவதும் வழக்கமாக வைத்துள்ளனர். அதன் மூலம் ரசிகர்கள் இணையதள பக்கத்தில் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

அந்த ரசிகர்கள் எங்கள் படம் நன்றாக இருக்கிறது, எனது ஹீரோ படம்  தான் அதிக வசூல் வேட்டை நடத்தியது வசூல் என ரசிகர்கள் மோதிக் கொள்கின்றனர். இது காலம் காலமாக நடந்து வருகிறது சிவாஜி எம்ஜிஆர்,  ரஜினி கமல், அஜீத் விஜய் என காலம் நகர்ந்து கொண்டே போய்க் கொண்டுதான் இருக்கிறது ஆனால் ரசிகர்களின் சண்டை ஓய்ந்தபாடில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்த வருடம் பொங்கலுக்கு கூட மிகப்பெரிய படங்கள் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளப் பக்கங்களில் சண்டை போட ஆரம்பித்துள்ளனர். அடுத்த வருடம் பொங்கலுக்கு அஜீத்தின் வலிமை படமும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் யார் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது வெளிவரும்போது தெரிந்துவிடும்  ஆனால் ரசிகர்கள் அதற்கு முன்பாகவே சமூக வலைதளப் பக்கத்தில் வலிமை மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய போஸ்டர்கள் வெளியீடு தற்போது சண்டை போட ஆரம்பித்து விட்டனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் கையிலுள்ள ரோகிணியை திரையரங்கு எப்பொழுதும் அஜித் ரசிகர்களின் கைத் தான் எப்போதும் ஓங்கி இருக்கும்.  அஜித்தின் பெரும்பாலான படங்கள் டிரெய்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என எது வந்தாலும் முதலில் ரோகிணி தியேட்டரில் தான் வெளியாகும் அதுபோலவே யார் படம் வருகிறதோ இல்லையோ தல அஜித்தின் வலிமை திரைப்படம் ரோகிணி தியேட்டரில் வெளியிடப்படும் என ரோகிணி தியேட்டர் உரிமையாளர் கூறியுள்ளார்.

இச்செய்தியை தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

Leave a Comment