பொல்லாதவன் படத்தில் முதன் முதலில் பயன்படுத்த இருந்தது இந்த பைக் தானம்.! அடுத்த ஆப்ஷன் தான் பல்சர் பைக்.!

0

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருகிறார் சமீபகாலமாக தனுஷின் வளர்ச்சி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்தளவு அசுர வளர்ச்சியாக வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் கடைசியாக தனுஷ் அவர்களுக்கு  ஏப்ரல் மாதத்தில் கர்ணன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

அதனைத்தொடர்ந்து ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. நேரடியாக நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியானாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக D43 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷிற்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் என்றால் வெற்றிமாறன் தான். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட்டானது. அப்படி 2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெற்றிப் பெற்ற திரைப்படம் தான் பொல்லாதவன் இந்த திரைப்படத்தை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் தனுஷ் அந்த திரைப்படத்தில் பல்சர் பைக் ஓட்டும் அழகை பலருக்கும் பிடித்துவிட்டது.

இந்த திரைப்படத்தின் மூலம் தான் இளைஞர்கள் மத்தியில் பல்சர் பைக் மிகவும் பேமஸ் ஆனது. ஆனால் இந்த பல்சர் பைக்  முதன்முதலில் பொல்லாதவன் திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பைக் கிடையாதாம். இந்தத் திரைப்படத்திற்காக  முதன்முதலில் தெரிந்தெடுக்கப்பட்ட பைக் டிவிஎஸ் அப்பாச்சிதான்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

polladhavan-dhanush
polladhavan-dhanush