ஆன்லைன் ரம்மியால் பறிபோனது காவலர் உயிர்! திருச்சியில் அதிர்ச்சி.

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ஆனந்த் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக கடன்வாங்கி கடனை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பராய்த்துறை அடுத்துள்ள அனலை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த இவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் வீட்டில் அனைவரும் உறங்கியதும் வீட்டின் பின்னாடி உள்ள மாட்டுக் கொட்டகையில் தனது தாயின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனந்தின் தந்தையார் எப்பொழுதும் போல அடுத்த நாள் காலையில் மாட்டு கொட்டகைக்கு சென்றார். அங்கு ஆனந்த் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த தற்கொலை குறித்து அவர் அருகில் உள்ள ஜியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

பின்பு தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்தின் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜியோ புரம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் காவலர் ஆனந்திற்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. ரம்மி விளையாடுவதற்காக தன்னுடன் பணிபுரியும் நண்பர்களிடமிருந்து அவ்வப்போது பணம் கடனாக வாங்கி உள்ளார். நண்பர்களிடம் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆனந்த் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த காதல் தோல்வி ஏற்பட்டதால் தற்கொலை செய்துள்ளாரா அல்லது கடனை கொடுக்க முடியாமல் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Comment