சென்னையில் உள்ள மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹெல்மெட் அணியாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றதால் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவை அடுத்து சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்கள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்கள் என பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது, அதுமட்டுமில்லாமல் தற்போது பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது, இந்த நிலையில் காவல்துறை அதிகாரியை ஹெல்மெட் அணியாமல் செல்வதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இப்படி இருக்க தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து காவல் நிலையத்திற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார், அதில் காவல்துறையினர் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் அது மட்டுமில்லாமல் கட்டாயம் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் அனுப்பி உள்ளார், மேலும் இப்படி போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
சமீபத்தில் மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதன் குமார் என்பவர் ஹெல்மெட் அணியாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்த போது பொதுமக்கள் அவரை புகைப்படம் எடுத்து GCTP செயலி மூலம் புகார் கொடுத்தார்கள் இதனை உடனே சம்பந்தப்பட்ட காவல் உயர் அதிகாரிக்கு அறிக்கை வைத்துள்ளார்கள் இதனையடுத்து மதன்குமார் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார் தெற்கு மண்டல காவல் ஆய்வாளர் மகேஸ்வரி.
