கஞ்சா வழக்கு போட்டு விடுவதாக மிரட்டி இளம்பெண்ணை நாசம் செய்த காவலர்கள்.! மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.

police
police

இளம்பெண் ஒருவர் கிருஷ்ணகிரியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் இந்த இளம் பெண்ணிடம் காவலர்கள் கஞ்சா வழக்கு போடுவேன் என மிரட்டி காவலர்  இளம்பெண்ணை கற்பழித்த அவலம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே காவலர்கள் மீது லஞ்ச புகார் லாக்கப் மரணம் என அடுக்கடுக்காக காவல் துறையினரின் மீது  குற்றங்கள் இருந்துவரும் நிலையில் இளம் பெண்ணிற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்கலே இப்படி இளம்பெண்ணை கற்பழித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பீமாண்டப் பள்ளியை சேர்ந்தவர் நிஷா வயது இருபத்தி ஐந்து தற்போது இவர் பெயர் மாற்றப்பட்டுள்ளது இவர் அதே பகுதியில் ஒரு இடத்தில்தான் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்  ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 4ஆம் தேதி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் சூலக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரு காவலர்கள் தன்னை மிரட்டி உறவு கொண்டதாக கூறி உள்ளார்.

அந்த புகாரில் சூளகிரி போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் முருகானந்தம் மாரியப்பன் ஆகிய இருவரும் தான் நடத்தி வரும் உணவகத்திற்கு அடிக்கடி வருவார்கள் வரும்போதெல்லாம் சாப்பாடு வாங்கிக் கொண்டு செல்வார்கள் அதுமட்டுமில்லாமல் பணம் கேட்டு மிரட்டுவார்கள்  பணம் கொடுக்கவில்லை என்றால் தாபா உணவகத்தில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்கிறோம் என கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டுவார்கள்.

police
police

அதுமட்டுமில்லாமல் கஞ்சா பொட்டலங்களை வைத்து சிறையில் தள்ளி விடுவோம் என்றும் கூறி பயமுறுத்தி இருவரும் தன்னுடைய சம்மதமே இல்லாமல் என்னை மாறி மாறி சீரழித்து விட்டார்கள் அவர்கள் இருவரும் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

உடனே அந்த புகாரை ஏற்றுக்கொண்ட மகளிர் காவல் துறையினர் காவலர் முருகானந்தம் மற்றும் மாரியப்பா இருவரும் மீது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாக 376/2 மிரட்டல் விடுத்ததால் இரு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.