AK 61 ஷூட்டிங் ஸ்பாட்டில் போலீஸ்.? நடந்தது என்ன.? வெளிவரும் உண்மை தகவல்..!

நடிகர் அஜித் அண்மைக்காலமாக தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து படத்தில் நடித்து வருகிறார். அப்படி அந்த இயக்குனர்களுடன் அடுத்தடுத்து இரண்டு மூன்று படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ஹச் வினோத்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அவருடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து வலிமை என்னும் திரைப்படத்திலும் நடித்தார். தற்போது ஹெச் வினோத்துடன்  மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனினும் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. ஏ கே 61 படத்தை வருகின்ற தீபாவளி அன்று வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு சமயத்தில் கூறியிருந்தார்.

ஆனால் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே செல்வதால் இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது இருந்தாலும் எப்பொழுது வெளியாகும் என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில் AK 61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் சென்ற மாதம் இறுதியில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாம்.

அந்த நேரத்தில் அஜித்தும் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் கலந்து கொண்டார். அடுத்த கட்ட படபிடிப்பு எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது வந்த தகவல் என்னவென்றால் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு காவலர்களின் அனுமதி இன்றி நடந்ததால் கேமராக்களை எல்லாம் வாங்கி வைத்துள்ளனர்.

இதனால் தான் படப்பிடிப்பு பாதியிலே நிற்பது போல் தகவல்கள் பரவி வருகின்றன ஆனால் இது முற்றிலும் வதந்தி தான். சென்ற மாதம் கடைசியில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இயக்குனர் ஹச் வினோத் படத்தின் லொகேஷன்காக வெளியூர் சென்று உள்ளார் என கூறப்படுகிறது. இன்னும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என படக் குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது

Leave a Comment