Darbar : பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு மிகப் பெரிய போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே அதன் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் லீக்காகி வைரலானது இதனால் படக்குழுவிற்கு மிகப் பெரிய தலைவலி வந்தது.
அதனால் ஏ ஆர் முருகதாஸ் புதிய கட்டுப்பாட்டை விதித்தார், முதலில் ரஜினிகாந்துக்கு போலீஸ் உடை அணிவித்து போட்டோ ஷூட் நடத்தினார்கள் அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியது, அதேபோல் நயன்தாரா யோகி பாபு ஆகியோர்கள் ஒரு மைதானத்தில் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியானது.
இப்படி அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோ வெளியானதால் முருகதாஸ் படப்பிடிப்பின்போது செல்போன் எடுத்துக் கொண்டு செல்ல தடை விதித்தார் அதுமட்டுமில்லாமல் பார்வையாளர்களும் படபிடிப்பில் அனுமதிக்கப்படவில்லை இப்படி கடும் பாதுகாப்பு இருந்தும் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக ஒரு காரின் அருகே நிற்கிறார் அதேபோல் நயன்தாராவும் ரஜினி பக்கத்தில் சுடிதார் போட்டுக்கொண்டு நிற்கிறார், இந்த புகைப்படம் இணையதளத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறார்கள், இன்னும் இரண்டு வாரங்கள் இதே ஊரில் தான் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்.


